படித்ததில் பிடித்தது – புறநானுறு


யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 129)

தமிழர் பண்பாட்டைப் பற்றி எடுத்துக்கூறும் “புறநானூறு” நான் படித்ததில் பிடித்து. இப்பாடலின் பொருள்:

எல்லா ஊர்களும் எமது ஊர்களே.
எல்லா மக்களும் எம் சொந்தம்.
நன்மை தீமை என்பது பிறரால் நமக்கு வருவதில்லை.
துன்பங்களும் ஆறுதல்களும் கூட மற்றவர் தருவதில்லை
சாதல் (இறப்பது) புதுமை யில்லை;
வாழ்தல் இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வாழ்வை வெறுத்து துன்பமென ஒதுங்கியதுமில்லை
பெரியதோர் ஆற்றின் நீர்வழி ஓடும் ஒரு தெப்பம்(படகு) போல இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம் ஆதலினால்,பிறந்து வாழ்வோரில் சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

  1. மறுமொழிகள் இப்பதிவிற்கு இல்லை. இப்பதிவின்மீதான தங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். பின்னூட்டங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
(ஆனால், மற்றவர் காண முடியாது)